64 நாட்கள் தொடர் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது

தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினர்களூக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்தது

இந்த நிலையில் தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ’பட்டாஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதனை அடுத்து தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

தனுஷின் 40 வது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளி இன்றி தொடர்ச்சியாக 64 நாட்கள் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து படக்குழுவினர் விரைவில் சென்னை திரும்பி அடுத்த கட்டமாக இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணியை தொடங்க உள்ளனர்.

’எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களை அடுத்து ’தனுஷ் 40; படமும் இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீசுக்கு தயாராகி விடும் என்பதால் தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த விருந்துகள் காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

’சுருளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். மேலும் கலையரசன், ஜியோ ஜார்ஜ், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுஅனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது


Recommended For You

About the Author: Editor