
கல்முனையில் ஐந்தாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பல்வேறு இடங்களிலிருந்து ஆதரவு தெரிவித்து பேரணியாக வருகை தந்த வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயத்துவதற்கான தமிழ், சிங்கள தரப்பு அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்து வரும் நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக நிர்வாக அதிகாரமுள்ள பிரதேசசெயலகமாக இயங்க வைக்க பிரதமர், தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் நேற்று நடத்திய உயர்மட்ட சந்திப்புக்களையடுத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.