நவம்பர் 13 தாக்குதல்! – €107 மில்லியன் நஷ்ட்ட ஈடு..!!

நவம்பர் 13 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை €107 மில்லியன் யூரோக்கள் நஷ்ட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பரிஸ் மற்றும் புறநகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 130 பேர் உயிரிழந்திருந்தனர். 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இவர்களுக்கான நஷ்ட்ட ஈடு வழங்கும் பணியை FGTI (பயங்கரவாத குற்றவியல் நஷ்ட்ட ஈட்டு பேரவை) மேற்கொண்டு வருகிறது.

மொத்தமாக ஒதுக்கப்பட்ட €250 மில்லியன் யூரோக்களில் இதுவரை €107 மில்லியன்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக FGTI அறிவித்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டதாக 2,659 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 806 பேர் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனவும், 1,267 பேர் மனநல பாதிப்படைந்தவர்கள் எனவும், 586 பேர் உடல் காயம ஏற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FGTI பேரவை தலைவர் Julien Rencki இது குறித்து தெரிவிக்கும் போது,  80 வீதமான பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு அவசரம் ஏதுமில்லை. அடுத்த ஆறு வருடங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட்ட ஈட்டினை கோரமுடியும் என தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor