காவல்துறையினர், ஜோந்தாமினர்கள் காயமடையும் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

காவல்துறையினர் மற்றும் ஜோந்தாமினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கடந்த வருடத்தில் 15 வீதத்தால் அதிகரித்துள்ளது.

தேசிய குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு அதிகாரசபை (l’Observatoire national de la délinquance et des réponses pénales – ONDRP) இத்தகவலை வெளியிட்டுள்ளது.

முந்தைய ஆண்டை விட 2018 ஆம் ஆண்டில் காவல்துறை மற்றும் ஜோந்தாமினர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் 15 வீதத்தால் அதிகரித்துள்ளது. மொத்தமாக 10,790 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த மஞ்சள் மேலங்கி போராட்டம் இதற்கு ஒரு பிரதான காரணமாக இருந்தது. காயமடைந்த அதிகாரிகளின் எண்ணிக்கை 10,790 ஆக இருக்கும் அதேவேளையில், கொல்லப்பட்ட (தற்கொலை அல்ல) அதிகாரிகள் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 25 ஆக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor