உண்ணாவிரத தேரருக்கு பிரதமரின் ஆலோசகர் கடிதம்!

மிலேனியம் செலன்ஜ் ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பில் உடதும்பர காஸ்யப தேரோவுக்கு பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சரித்த ரத்வத்தே எழுதியுள்ள கடிதத்தில் ஒப்பந்தத்தில் காணப்படும் குறைபாடுகளை உடன் தெரியப்படுத்துமாறு கேட்டிருக்கின்றார்.

கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, மிலேனியம் செலன்ஜ் உடன்படிக்கையின் ஒரு பிரதியை தங்களது கவனத்துக்கு அனுப்பியுள்ளேன்.

அதில் எமது தாய்நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், அவற்றுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை எனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

உங்களது உண்ணாவிரத பிரதேசத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பதாதையில் மிலேனியம் நகர அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

அதன் உண்மையான வாக்கியம்” மிலேனியம் சவாலுக்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை என்பதாகும் என்பதையும் தங்களது மேலான கவனத்துக்குக் கொண்டுவர விருப்புகின்றேன் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor