பெரமுன குண்டு வெடிப்பு நடத்த சதித்திட்டம்!

எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பொதுஜன பெரமுன கட்சியினர் குண்டு வெடிப்பு ஒன்றை நடத்தும் சதி திட்டத்தை தீட்டியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி முறைப்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் ராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்னவால் நேற்றையதினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டில் அடுத்த வாரமளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி தகவல் டிவிட்டர் கணக்கொன்றின் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, ராஜாங்க அமைச்சர் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிகபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor