டெங்கு பாதிப்பினால் 200 இற்கு மேற்பட்டோர்வைத்தியசாலையில்!

நீர்கொழும்பு வைத்தியசாலையில் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 200 இற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 40 பேர் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் என்றும், மற்றவர்கள் பணியாளர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பில் கடற்கரை தெரு, தளுபத்தை, தழுவகொட்டுவ, கொச்சிக்கடை, பலகத்துறை, தக்கியா வீதி உட்பட பல பிரதேசங்களில் டெங்கு நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நீர்கொழும்பு வைத்தியசாலையில் இந்த வருடத்தில் டெங்குக் காய்ச்சலின் காரணமாக எட்டு பேர் மரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor