கோத்தபாயவுக்கு எதிராக முறைப்பாடு!

தான் நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் 17ம் திகதியே சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ உறுப்பினர்களை விடுவிப்பதாக பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோத்தபாய தெரிவித்த கருத்தினால் மற்றொரு தரப்பின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து திருமதி சந்தியா எக்னலிகொட மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளித்துள்ளார்.

தனது கணவரான ஊடகவியலாளர் ப்ரஹீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறிய அவர், இராணுவ புலனாய்வு தொடர்பான பிற வழக்குகள் இருப்பதால், கோட்டாபய ராஜபக்ஷவின் அறிக்கை பாதிக்கப்பட்டவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாகவும் சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: Editor