குருதி மாற்றி ஏற்றிய விவகாரம்- விசாரணைகள் ஒத்திவைப்பு!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தம் மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, குறித்த வழக்கினை தை மாதம் 08ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையை சேர்ந்த விதுலக்சன் (வயது – 09) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் கடந்த 19.03.2019 அன்று உயிரிழந்திருந்தார்.

இரத்த மாதிரியை மாற்றி வழங்கியதன் காரணமாகவே குறித்த இளைஞன் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் – முழுமையான அறிக்கை கோரும் நீதிமன்றம்


Recommended For You

About the Author: Editor