எஸ்ஸெக்ஸ் விவகாரம் – வியட்நாம் அதிகாரிகள் விசாரணை!

இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் லொறி கொள்கலன் ஒன்றில் இருந்து 39 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வியட்நாமில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வியட்நாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள எட்டு சந்தேகநபர்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வியட்நாம் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சடலமாக கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனப் பிரஜைகள் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அவர்கள் அனைவரும் வியட்நாம் பிரஜைகளாக இருக்க கூடும் என பிரித்தானிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor