வாக்­காளர் அட்­டை கிடைக்­காதவர்களுக்கான அறிவுறுத்தல்!

வாக்­காளர் அட்­டை­களை விநி­யோ­கிக்கும் 2192 தபால் அலு­வ­ல­கங்­க­ளுக்கு பொலிஸ் பாது­காப்பை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டை­களை விநி­யோ­கிக்கும் பணிகள் 75 வீதம் நிறை­வ­டைந்­துள்­ள­தாக தபால் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

வாக்­கா­ளர் அட்­டைகள் எதிர்­வரும் 9ஆம் திகதி வரை வீடு­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும் என, பிரதி தபால்மா அதிபர் ராஜித ரண­சிங்க கூறி­யுள்ளார்.

இதற்­காக 8000 ஊழி­யர்கள் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். வாக்­காளர் அட்­டைகள் இது­வரை கிடைக்கப் பெறா­த­வர்கள், அரு­கி­லுள்ள தபால் நிலை­யங்­க­ளுக்குச் சென்று தமது ஆள் அடை­யா­ளத்தை உறு­திப்ப­டுத்தி வாக்­காளர் அட்­டை­களைப் பெற் றுக்கொள்ள முடியும் என, பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor