பரிஸ் பருவநிலை ஒப்பந்தம் தொடர்பில் பிரான்ஸ் – சீன தலைவர்கள் முக்கிய அறிவிப்பு!

அமெரிக்காவால் கைவிடப்பட்ட பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளதாக பிரான்ஸ் மற்றும் சீன தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சீனத் தலைநகர் பீஜிங்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் இன்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

“பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச நாடுகள் பரிஸில் கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதில் பிரான்சும், சீனாவும் உறுதியாக உள்ளன.

பருவநிலை மாற்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தெளிவாக வழிகாட்டும் அந்த ஒப்பந்தம், திரும்பப் பெற முடியாதது ஆகும்.

பரிஸ் ஒப்பந்தத்தை முழுமையாகவும், திறனுடனும் செயற்படுத்துவதில், உலக நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற பிரான்சும் சீனாவும் தொடர்ந்து பாடுபடும்” என்று அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor