சி.ஐ.டி எனக் கூறி கொள்ளை, கத்திக்குத்து!

யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, அவரிடமிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபர், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று (6) இரவு 11 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் செல்லத்துரை செல்வக்குமார் (50) என்பவரே கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளார்.

மருதனார் மடம்- உரும்பிராய் வீதியில் இந்த சம்பவம் நடந்தது.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை, இரண்டு மோட்டார்சைக்கிள்களில் வந்த நபர்கள் தம்மை சிஐடி என கூறி அவரது அடையாள அட்டையை கேட்டு, சோதனையிட்டு விட்டு சென்றுள்ளனர்.

பின்னர் மீண்டும் அவரை சற்றுத்தூரத்தில் வழிமறித்து, அவரை கத்தியால் குத்தி, அவரிடமிருந்த கையடக்க தொலைபேசி, மற்றும் 25,000 ரூபா பணம் என்பவற்றை பறித்து சென்றுள்ளனர்.

படுகாயமடைந்து வீதியில் விழுந்து கிடந்தவரை அந்த பகுதியால் வந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்த விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor