மனைவி பிள்ளைகளை கொலை செய்தவருக்கு தூக்குத்தண்டனை.

இரத்மலானையில் உள்ள வீடொன்றுக்குள் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்ய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு மரண தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி இரத்மலானை பிரதேசத்தில் வீடொன்றின் அறையினுள் 35 வயதுடைய பெண்ணையும் 3 வயது மகன் மற்றும் ஒரு வயதுடைய குழந்தையொன்றையும் எரித்து கொலை செய்ததாக குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து குறித்த நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டில் குறித்த நபரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராய்ச்சி இன்று (வியாழக்கிழமை) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்