எங்களை முட்டாள் ஆகிவிட்டார்கள்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னெடுப்பின் மூலம் எட்டப்பட்ட 13 அம்ச கோரிக்கைளை ஐந்து கட்சிகளும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமை பல்கலைக்கழக சமூகத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயற்பாடு என யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியம் விசனம் வெளியிட்டுள்ளது.

யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்விடயத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவித்துள்ள அவர்கள், “5 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்து அவர்கள் ஏற்காவிடின் அதன் பின்னர் வேறு முறையில் அதனை அணுகும் முறை குறித்து கலந்துரையாடுவதாகவே முன்னர் தீர்மானிக்கப்பட்டது.

5 கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் உரையாடவில்லை. ஆனால் தனித்தனியாக தமது முடிவை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக சமூகத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயற்பாடு என்றே நாம் இதனை பார்க்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்