
வருடத்தில் இலங்கையில் ஒரு இலட்சம் பேருக்கு 15 பேர் என்ற வீதத்தில் நாளாந்தம் வாகன விபத்தினால் உயிரிழப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த விபத்து மரணங்களுக்கு பெரும்பாலும் ஒழுக்க விதிகளுக்கு அப்பால் வாகனங்கள் செலுத்தப்படுவதே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஒழுக்க விதிமுறைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார்.
ஒவ்வொரு வருடமும் உலகில் 1.5 மில்லியன் மக்கள் வீதி விபத்துக்களினால் உயிரிழக்கின்றனர். 30 தொடக்கம் 40 மில்லியனுக்கு இடைப்பட்டவர்கள் வாகன விபத்துக்களினால் காயங்களுக்கு உள்ளாகின்றனர்.
உயிரிழப்போர்களில் 80 சதவீதமானோர் கீழ் மட்ட மற்றும் மத்திய வருமானத்தை கொண்ட நாடுகளிலேயே உயிரிழ்க்கின்றனர்.
இதே போன்று 70 சதவீதமானோர்களில் இளைஞர்கள் உயிரிழக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.