வைத்தியசாலை ஊழியர்கள் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் 15 ஊழியர்கள் டெங்குகாய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலை சுற்றுப்புறச் சூழலில் டெங்கு நுளம்புகளை உற்பத்தியாகும் இடங்கள் இனம்காணப்பட்டமையால் கடந்த 4 ஆம் திகதி வைத்தியசாலை வளவில் மாபெரும் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் வைத்திய அதிகாரி இரேஷாபதிரகே தெரிவித்தார்.

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 15 நபர்களில் சத்திர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் ஐந்து பேருக்கும், தாதிமார்களும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனையோர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சிரமதான நிகழ்வின்போது பலாங்கொடை இம்புள்பே சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலை நிர்வாகிகள் மற்றும் பலாங்கொடை பொலிஸ் நிலையம் இம்புள்பே பிரதேச சபை பலாங்கொடை நகரசபை உட்பட பல நிறுவன அதிகாரிகள் பங்கு கொண்டனர்.


Recommended For You

About the Author: Editor