60 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட அனாதை இல்லம்!!

அந்நூர் சேரட்டியின் முழு பங்களிப்புடன் சுமார் 60 மில்லியன் ரூபாய் நிதி ஒதுகீட்டில் கற்பிட்டி வன்னி முந்தலில் அமைக்கப்பட்ட அனாதைகள் இல்லம் 02-11-2019 அன்று வைபக ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக குவைத் நாட்டில் இருந்து வருகை தந்த அந்நஜாத் அமைப்பின் முக்கிய பிரமுகர்களான Ash – sheikh Ehab mohamath Al dabous மற்றும் Ash Shiek h samih abdul Azeez. அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும். சிறப்பு அதிதிகளான இலங்கைக்கான அந்நூர் செரட்டியின் தலைவர் அல்ஹாஜ் செய்யது அலியார் ஹாஜியார் அவர்களும், இவ்வமைப்பின் பிரதித் தலைவர் றிப்கி முஹம்மத் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் இப்பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரனங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கபட்டது.


Recommended For You

About the Author: Editor