சிறுநீரக நோயாளர்களுக்கு தன்னியக்க தானியங்கி டயாலிசிஸ் முறை!

சிறுநீரக நோயாளர்களுக்கு தன்னியக்க தானியங்கி பெரிட்டோனியல் டயாலிசிஸ் முறையைப் பயன்படுத்துவதை வீட்டில் இருந்தே மேற்கொள்வதற்கான முறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கு தானியங்கி பெரிட்டோனியல் டயாலிசிஸ் முறையை (Automated Peritoneal Dialysis) வீட்டில் இருந்தே பயன்படுத்தி சிகிச்சையை பெற்றுக்கொள்ளக்கூடிய வீட்டு டயாலிசிஸ் அமைப்பு (Home Dialysis System) என்ற கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சேவையை பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Recommended For You

About the Author: Editor