கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகை!!

மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள் ‘எம்.சி.சி ஒரு புற்றுநோய்’ என்றும் ‘அமெரிக்கா, எங்களை விட்டு விடுங்கள்’ என்றும் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அபிவிருத்தி திட்டங்களுக்காக அமெரிக்கா வழங்கும் 480 மில்லியன் டொலர் மானியம் தொடர்பான ஒப்பந்தம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கையெழுத்திடப்படும் என அரசாங்கம் கூறியிருந்தது.
இதையடுத்து, இந்த ஒப்பந்தம் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்றையதினம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor