தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு!

தாய்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தில் இஸ்லாமிய சமூகத்தினர் அதிகமுள்ள தென்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியை இலக்கு வைத்தே இன்று (புதன்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தாக்குதலை முஸ்லிம் பிரிவினைவாதிகள் நடத்தி இருக்கலாம் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்லாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட மிகப் பெரிய டுதுப்பாக்கிச் சூடு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனக் கலவரத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சுமார் 7,000 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் பலரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து வரும் சூழலில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor