போதைப்பொருள் கும்பலால் குழந்தைகள் உட்பட 9 பேர் கொலை!

வடக்கு மெக்ஸிகோவில் போதைப்பொருள் துப்பாக்கி ஏந்திய சந்தேக நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பெண்கள், ஆறு குழந்தைகள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னரே குறித்த பகுதியில் குடியேறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனம் ஒன்றில் சென்றுகொண்டிருந்தபோதே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த போதைப்பொருள் துப்பாக்கி ஏந்திய சந்தேக நபர்கள் தவறான அடையாளத்தின் விளைவாக இவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அற்புதமான குடும்பம் மற்றும் நண்பர்கள். ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்டிருந்த இரண்டு போதைப்பொருள் விற்பனையாளர்களிடையே சிக்கிக் கொண்டனர்” என பதிவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor