கட்டுப்பாட்டை இழந்து வெளியேறிய எரிபொருள்! – 6 பேர் கைது..!!

நேற்று திங்கட்கிழமை இரவு Yvelines இல் உள்ள எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றில் இலவசமாய் எரிபொருள் வெளியேறியுள்ளது.

Sartrouville நகரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பெற்றோல் மற்றும் எரிவாயு வெளியேறியுள்ளது.

வாடிக்கையாளர்கள் கடன் கட்டை மூலம் பணம் செலுத்தாமலோ அல்லது பணமோ செலுத்தாமல் நபர் ஒருவர் எரிபொருள் நிரப்பியதை அடுத்து, அவர் இணையத்தில் இத்தகவலை பரப்பியுள்ளார்.

அதன் பின்னர் பல நபர்கள் விறுவிறு என குறித்த நிலையத்தில் குவிந்த பலர் எரிபொருளை நிரப்பிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

பின்னர் அதிகாலை 2:00 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்ட அர். தொழில்நுட்ப பழுது காரணமாக இது இடம்பெற்றிருக்கலாம் என அறிய முடிகிறது. இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும், €75,000 தண்டப்பணமும் அறவிட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor