
காடழிப்பை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரங்களை வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்யதடை செய்துள்ளதாக அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
3. வன அழிப்பை தடுக்கும் நோக்கில் இயந்திர சங்கிலி வாள் இறக்குமதியை தடை செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 14ஆவது விடயம்)
இது வரையில் நாட்டில் வனப்பகுதி மொத்தக் காணியில் 29.7 சதவீதமாவதுடன் 2030ஆம் ஆண்டளவில் இத்தொகையை 32 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு அமைவான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனுமதியற்ற ரீதியில் மரங்களை அழித்தல் காடுகளை அழிவதற்கு முக்கிய விடயமாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இந்த வன அழிப்புக்காக இலகுவாக கொண்டு செல்லக்கூடிய இயந்திர சங்கிலி வாள் பெருமளவில் பயன்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதுவரையில் 82,000க்கும் மேற்பட்ட இயந்திர சங்கிலி வாள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதுடன் வன அழிப்பை தடுப்பதற்கும் வனத்தின் அளவை அதிகரிக்கும் நோக்கில் இயந்திர சங்கிலி வாள் இறக்குமதியை தடை செய்வதற்காக 1969 ஆம் ஆண்டு இலக்கம் ஒன்றின் கீழான ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தேவையான நடைமுறைகளை மேற்கொள்வதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.