சுகவீனமடைந்த மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை…!!

88 வயதுடைய மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். Fontainebleau இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சனிக்கிழமை Fontainebleau, Seine-et-Marne நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுகவீனமடைந்திருந்த தனது 88 வயதுடைய மனைவியை 87 வயதுடைய கணவர் ரைஃபிள் வகை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.

பின்னர் துப்பாக்கியை தன் பக்கம் திருப்பி தாமும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

மனைவி சுகவீனமடைந்து மிக மோசமான நிலையில் இருந்ததாகவும், அவர் துன்பப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத கணவர் இச்செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்களை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் அனைத்தும் கைவிடப்படும் என அந்நகர அரச வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor