05.11.2019 ராசி பலன்

மேஷம்

மேஷம்: உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் நாள். உங்கள் செயல்பாடுகளில் கண்ணும் கருத்து மாக, பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மற்றவர்களின் பாராட்டு கிடைக்கும். புதுத்தொழில் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உழைப்பால் உயர்வு பெறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: மாறுபட்ட சிந்தனையாலும், புதிய யுக்திகளாலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் உங்களின் சிறப்பான செயல்பாடுகளால் வளர்ச்சி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான நிலை இருக்கும். சாதிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: மாலை 4.48 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடியுங்கள். அவசரகதியில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: கணவன் மனைவிக்குள் நட்பும், புரிந்துணர்வும் ஏற்படும். வீட்டின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆதரவு உண்டு. மாலை 4.48 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தி யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமைதியான நாள்.

கன்னி

கன்னி: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

துலாம்

துலாம்: நண்பர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தந்தையால் அனுகூலம் உண்டு. நல்ல அதிர்ஷட வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

தனுசு

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உற்சாகமான நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். மற்றவர்களை குறை சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: எடுத்த காரியங்களை முடிப்பதில் அதிக அலைச்சல் உண்டாகும். வீண்பண விரயங்களும், மருத்துவ செலவினங்களும் ஏற்படும். பிள்ளைகளை அரவணைத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரும் என்பதால் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண் டிய நாள்.

மீனம்

மீனம்: உங்கள் செயல்பாடுகளில் மேம்பட்ட தன்மை வெளிப்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகளால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிறைவைத்தரும் நாள்


Recommended For You

About the Author: Editor