திருட்டுதனமாக எந்த ஒப்பந்தமும் இல்லை – சஜித்!!

கூட்டமைப்புடனோ அல்லது வேறு எந்தக் கட்சிகளுடனோ தனக்கு திருட்டுத்தனமான எந்தவொரு இணக்கப்பாடுகளும் இல்லை என ஜனாதிபதி ​வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொய் வாக்குறுதிகளை வழங்கி அரசியலில் ஈடுபடும் ஒருவர் தா அல்ல எனவும், அபிவிருத்திகளை மேற்கொள்வதாக எனது தந்தை கூறி அவர் அதனை உறுதியாக நிறைவேற்றியதுபோல, தானும் செய்வதாக கூறும் விடயங்களை உறுதியாக செய்வோம் என்றும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

30 வருட யுத்தம் காரணமாகவே இலட்சக்கணக்கான மக்கள் தமது உறவுகளை இழந்துள்ள நிலையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ​வேட்பாளர் சஜித் பிரேமதாச இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor