இலங்கையில் முதலீடு செய்ய சீனா ஆர்வம்.

இலங்கையில் மேலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீனாவின் முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சியாயுன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சிறந்த நல்லுறவு நிலவுகிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் மேலும் பல சீன முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர், இது இலங்கைக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்