13 போலி வேட்பாளர்கள்.

ஜனாதிபதி தேர்தலில் குறைந்தபட்சம் 13 போலி வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது.

இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு களமிறங்கியுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போலி வேட்பாளர்களில் ஏழு பேர் முக்கியமான ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவும் ஏனைய ஆறு பேர் மற்றொரு முக்கிய வேட்பாளருக்கு ஆதரவாகவும் போட்டியில் இறங்கியுள்ளனரென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், முக்கிய வேட்பாளர்களின் மேடைகளில் காணப்பட்டனரென்றும் இந்த வேட்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், இரண்டு முக்கிய போட்டியாளர்களுக்கு ஆதரவான தேர்தல் பேரணிகளில் உரையாற்றியுள்ளனரென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிச்சுமை தேவையின்றி அதிகரித்துள்ளதாக தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய, வாக்குச்சீட்டு மிகவும் நீளமானதாக உள்ளதென்றும் மேலதிகமான வாக்குப் பெட்டிகளை பெற வேண்டியுள்ளதென்றும் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்