தொழிலாளர் தேசிய சங்கத்தின் மூன்றாவது பேராளர் மாநாடு

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மூன்றாவது பேராளர் மாநாடு இன்று ஹட்டன் D K W. மண்டபத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் அவர் இந்த நிகழ்வை தலைமை ஏற்று நடத்தினார்.

இதன் போது பல்வேறு வகையான உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன

தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொது செயலாளராக இன்றையதினம் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவருமான திரு வேலு சிவானந்தன் அவர்களுக்கான நியமனம் கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் திருக்கரங்களால் வழங்கி வைக்கப்பட்டது. ( லிந்துல. சுரேஷ்


Recommended For You

About the Author: Editor