முல்லைத்தீவில் கடும் பாதுகாப்பு!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்கு கொள்கின்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.

இதனையடுத்து குறித்த விநாயகர் விளையாட்டுக்கழக மைதானம் மற்றும் முள்ளியவளை தொடக்கம் முல்லைத்தீவு வரையான வீதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சஜித்தின் பரப்புரை கூட்டத்திற்காக வருகை தரும் மக்கள் சோதனைகளின் பின்னர் மைதான வளாகத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor