அவுஸ்ரேலிய நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு!

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்வதற்காக 2006-ம் ஆண்டு உயிரணுக்கள் தானம் செய்துள்ளார்.

இதன்மூலம், அந்த தோழிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கிடையிலான நட்பு முறிந்தபோதும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில், அந்த ஆணின் பெயர் ‘பெற்றோர்’ என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அந்த குழந்தையும் அவரை ‘டாடி’ என்றே அழைத்துள்ளது.

இந்நிலையில், அவருடனான நட்பை முறித்துக்கொண்ட தோழி, குழந்தையுடன் நியூசிலாந்து செல்ல முடிவு செய்த போது, அதிருப்தி அடைந்த அந்த நபர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், குழந்தையின் பயாலஜிக்கல் தந்தையாக தன்னை அறிவிக்க வேண்டும் என்றும், குழந்தையுடன் தனது மனைவி நியூசிலாந்து செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். குழந்தையின் தந்தை என்பதற்கான ஆவணத்தையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயிரணு தானம் செய்திருப்பதை வைத்து, மனுதாரர் குழந்தையின் தந்தை என உரிமை கோர முடியாது என தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது , உயிரணு தானம் செய்தவர்தான், குழந்தையின் தந்தை என நீதிமன்றம் கூறியதோடு கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நிராகரித்துள்ளது.

மனுதாரர் சட்டப்பூர்வ தந்தை என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதால், தாயாரின் குடும்பம் நியூசிலாந்து செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை உயிரணு தானம் மூலம் பிறந்த, பெண் குழந்தைக்கு தற்போது 11 வயது ஆகிறமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor