கிழக்கு மாகாணத்தை சர்வதேசத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி

கிழக்கு மாகாணத்தை சர்வதேசத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் மௌனம் காக்கிறதென்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நாம் தமிழ் கட்சிகளுடன் ஐக்கியமாக பயணிக்கவே விரும்புகிறோம். இன்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் அனைவரும் சஜித் பிரேமதாசவுடன்தான் இருக்கிறார்கள்.

ஆனால், இது எல்லாம் சம்பந்தனின் பார்வைக்கு செல்லாதமையானது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த அடிப்படைவாதத்தை தமிழ்- சிங்கள மக்கள் ஒன்றிணைந்துதான் முடிவுக்குக்கொண்டுவர வேண்டும்.

இந்த அடிப்படைவாதிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? இன்று கிழக்கு மாகாணத்தை சர்வதேசத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன.

இதற்கெல்லாம் கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடவில்லை. இங்கு இவர்களது சுயாதீனம் எங்கு சென்றது? இதுதொடர்பாக தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்” என மேலும் தெரிவித்தார்


Recommended For You

About the Author: ஈழவன்