வாக்களார் அட்டை விநியோகிக்கும் பணி 75வீதம் பூர்த்தி.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் 75வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 9ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் 9,000பேர் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 9ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிசெய்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: ஈழவன்