யாழ்.பல்கலை மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணப்பல்கலைகழகத்தின் மருத்துவத்துறையின் இறுதி வருட மாணவனாகிய கியூமன் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் போதனா வைத்தியசாலையின் முன்பதாக இருக்கும் ஆண்கள் விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த மாணவனின் நண்பர்கள் விடுமுறையில் வீட்டிற்குசென்ற நிலையில் கதவினை உட்பக்கத்தால் பூட்டி விட்டு தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.

இரண்டு நாட்கள் கடந்து விட்ட நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் அருகில்இருக்கும் அறை நண்பர்கள் அறைக்கதவை திறந்து பார்த்த பொழுது அழுகியநிலையில் உடலை கண்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு பொலிசாரின் உதவியுடன் உடல் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்