தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது செருப்பு வீச முயற்சி.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் வாகனத்தொடரணி மீது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைச் சேர்ந்த தாயொருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்ட போது பொலிஸார் அவரை மடக்கி தடுத்தனர்.

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முடிவெடுப்பதற்காகக் கூடியிருந்தது.

இதன்போது வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். எனினும் பொலிஸார் அவர்களை கூட்டம் இடம்பெறும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கவில்லை.


இந் நிலையில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இதன்போது தமிழரசுக்கட்சியின் கூட்டம் முடிவடைந்து பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் தமது பாதுகாப்பு வாகனத்தொடரணியில் வெளியேறினர்.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் தனது செருப்பை கழற்றி வாகனத்தொடரணி மீது எறிய முற்பட்டபோது அவரை அங்கிருந்த பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்