முச்சக்கர வண்டி சாரதியை சந்தித்த யேர்மனி அதிபர்

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள யேர்மனி அதிபர் நேற்று (நவம்பர் 2) டெல்லி ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் அரசு முறை பயணமாக அந்நாட்டு 12 துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இந்தியா வந்துள்ளார்.

தனது குழுவுடன் ஹைதராபாத் இல்லத்தில் தங்கியுள்ளார். பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின் போது மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 துறைகளில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் இரு நாட்டுக்கும் இடையே கையெழுத்தாகின.

இந்நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள துவாரகா செக்டார் 21 மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்ற ஏஞ்சலா மெர்கெல் மெட்ரோ ரயிலில் சிறிது நேரம் பயணம் செய்தார்.

அந்நாட்டின் அரசுக்கு சொந்தமான அபிவிருத்தி வங்கியான கே.எஃப்.டபிள்யூ நிதியுதவியில் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களையும் பார்வையிட்டார்.

அங்கு 30 நிமிடங்கள் வரை செலவிட்ட அவர், ரயில் நிலைய வாசலில் பயணிகளுக்காக காத்திருந்த ஆட்டோ சாரதிகளை சந்தித்துப் பேசினார்.

முச்சக்கர வண்டி சாரதிகளுடன் 3 நிமிடம் வரை பேசியுள்ளார். அவர்களின் வேலை, முச்சக்கர வண்டி ஆகியவை குறித்து விசாரித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ராஜ்குமார் என்ற முச்சக்கர வண்டி சாரதி, எங்களது தொழில் குறித்து யேர்மனி அதிபர் கேட்டறிந்தார். அவருடன் கைக்குலுக்கிப் பேசியது மிகுந்த மகிழ்ச்சியளித்தது என்று தெரிவித்தார்.

முன்னதாக தமிழகத்தில் போக்குவரத்துத் துறையைச் சீரமைக்க 1,600 கோடி ரூபாய் வழங்கப்படும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor