ஆஷிகா தெற்காசிய போட்டிக்கு தெரிவு!

13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆஷிகாவும் இடம்பிடித்துள்ளார்.

நடந்து முடிந்த பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியின் பின்னர், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலா 7 பேர் கொண்ட பெண்கள், ஆண்கள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சாமரி வர்ணகுலசூரிய தலைமையிலான இலங்கை பெண்கள் பளுதூக்குதல் அணியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீராங்கணை ஆஷிகாவும் இடம்பிடித்துள்ளார்.

கொமன்வெல்த் விளையாட்டு நிகழவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திகா திசாநாயக்கவும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 1ம் திகதி நேபாளத்தின் காட்மண்டுவில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor