அனைவருக்கும் விசேட அழைப்பு விடுத்த சந்திரிகா!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘அப்பே ஸ்ரீ’ அமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

அத்தனகலையில் இன்று இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் உட்பட தம்முடன் இணைந்து பயணிக்க விஅனைவருரும்பும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறுகின்ற மாநாடு குறித்தும் ஆராயப்படவுள்ளது.

அத்துடன் சந்திரிகா தலைமையேற்றுள்ள அப்பே ஸ்ரீ அமைப்பில் சுதந்திரக்கட்சியின் முக்கிய சில நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளீர்ப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அதெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor