இன்று வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம்!!

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோக்கும் விசேட தினம் இன்றாகும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் 40 வீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள தபால் மா அதிபர், எதிர்வரும் 9 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிசெய்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor