இலங்கையில் சீன உயர்மட்ட அதிகாரி!!

சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அரசியல் உயர்மட்டங்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டு தேசிய குழுவின் உதவித் தலைவரான வாங் காங் என்ற உயர்மட்டப் பிரதிநிதியே கொழும்பு வந்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

எனினும், இந்தப் பேச்சுக்களின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான விபரங்களோ, சீன அரச பிரதிநிதி ஏனைய சிறிலங்கா அரசியல் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பு விபரங்களோ வெளியிடப்படவில்லை.


Recommended For You

About the Author: Editor