தற்காலிகமாக மூடப்பட்டது நுகேகொடை மேம்பாலம்!!

நுகேகொடை மேம்பாலம் (flyover bridge) தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய இன்று (சனிக்கிழமை) முதல் குறித்த மேம்பாலம் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்படவுள்ளது.

இதனால் குறித்த பாதையில் பயணிக்கும் சாரதிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த சீரமைப்பு பணியை எதிர்வரும் சில நாட்களில் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

261 மீட்டர் நீளமும் 8.5 மீட்டர் அகலுமும் கொண்ட இந்த மேம்பாலமானது கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor