ரஜினிக்கு சிறப்பு விருது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரைப்படத்துறைக்கான ‘Icon of Golden Jubile’ விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவாவில் 50ஆவது சர்வதேச திரைப்படவிழா இம் மாதம் 20 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் இந்திய சினிமாவில் முக்கிய பங்காற்றியமைக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கான ”Icon of Golden Jubile of #IFFI2019‘ விருது வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

அதேநேரம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகை இசபெல் ஹூபர்ட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது


Recommended For You

About the Author: Editor