யுனெஸ்கோவின் அறிவிப்பு!

சர்வதேச அளவில் செய்தியாளர்களை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் தண்டிக்கப்படவில்லை என்று யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து 2018-ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் பயங்கரவாதம், போர் வன்முறை உள்ளிட்ட சம்பவங்களில் 1,109 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.

இவர்கள் கொலையில் சம்பந்தப்பட்டவர்களில் 90 சதவீதமானோர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவில்லை. போர் இல்லாத பகுதிகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக 55 சதவீத செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.

அந்தவகையில் அரசியல், குற்றம், ஊழல் ஆகியவை குறித்து செய்திகளை எழுதும் செய்தியாளரகள் கொலை செய்யப்படுகிறார்கள்.

எனினும் கடந்த 5 ஆண்டுகளில் செய்தியாளர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

அரபு நாடுகளில்தான் 30 சதவீத செய்தியாளர்களும், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 26 சதவீத செய்தியாளர்களும், ஆசிய-பசிபிக் நாடுகளில் 24 செய்தியாளர்களும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 2018ஆம் ஆண்டைக் காட்டிலும் 2019 இல் இதுவரை செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்ட எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. கொலை செய்யப்பட்ட செய்தியாளர்களில் 93 சதவீதம் பேர் உள்ளூர் செய்தியாளர்களே என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor