யாழில் 98 வீத வாக்களிப்பு.

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 31 ஆம் திகதி மற்றும் 01 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 98 வீதமான வாக்குப்பதிவு முல்லைத்தீவு மாவட்டத்தில் 97 வீதமான வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சியில் 90 வீதமான வாக்குப்பதிவும் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இம்முறை தபால் மூல வாக்களிப்பிற்கு 6,59,514 பேர் தகுதி பெற்றுள்ளனர். பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

மேலும் பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

குறித்த நாட்களில் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி தாம் கடமையாற்றும் இடத்திற்கு அருகிலுள்ள மாவட்ட செயலகங்களில் தபால் மூலம் வாக்குகளை அளிக்க முடியும் என்றும் தேர்தல்கள் அணைக்குழு தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்