
பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ்
திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு
திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு
இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றபோது கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அங்கு விஜயம் மேற்கொண்டு நேர்முகத்தேர்வுக்கு வருகை தந்தவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதுவரை காலமும் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தென்னிலங்கையிலேயே இடம்பெற்று வந்திருந்தமையினால் கௌரவ ஆளுநர் அவர்கள் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக தற்போது இந்த நேர்முகத் தேர்வுகள் வடமாகாணத்திலேயே நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஆரம்ப பயிற்சி முகாமும் வடமாகாணத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.