கட்டுநாயக்காவில் போதைப்பொருளை கண்டுபிடிக்க ரோபோ.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் போதைப்பொருள் மற்றும் வெடிப்பொருட்களை இனங்காணும் இரண்டு ரொபோ இயந்திரங்களை விமான நிலையத்தினுள் பொருத்தும் நிகழ்வு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (01) மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 16 கோடி ரூபாய் பெறுமதியான இந்த ரொபோக்கள் இரண்டும் சீன மக்கள் குடியரசினால் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இயந்திரங்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு மற்றும் வௌியேறும் முனையங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் சீன மக்கள் குடியரசினால் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த மற்றும் மஞ்சுல செனரத் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்