ரூ.1 லட்சம் கோடியில் 100 புதிய விமான நிலையங்கள்!

நாட்டில், 2024ம் ஆண்டுக்குள், ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில், 100 புதிய விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வரும், 2025ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை, 350 லட்சம் கோடி ரூபாயாக எட்டும் இலக்கை அடைவதற்காக, நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை இரட்டிப்பாக்க, பிரதமர் நரேந்திர மோடி ஆர்வமாக உள்ளார்.

சமீபத்தில், டில்லியில், 2025ம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றிய ஆய்வுக் கூட்டம் நடந்தது.இதில், 2024ம் ஆண்டுக்குள், 1 லட்சம் கோடி ரூபாய் செலவில், 100 புதிய விமான நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அத்துடன், உள்நாட்டில் பயிற்சி பெற்ற விமானிகளின் எண்ணிக்கையை, ஆண்டுக்கு, 600 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. ‘ட்ரோன்கள்’ எனப்படும், ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Recommended For You

About the Author: Editor