மிகப்பெரிய போதி தர்மரின் சிலை அமைக்கத் திட்டம்!

போதி தர்மரின் வரலாறு மூலம் தமிழ்நாடு – சீனாவிற்கு இடையிலான உறவை பலப்படுத்த தமிழ்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி காஞ்சிபுரத்தில் ஒரு மிகப் பெரிய போதி தர்மர் சிலையை நிறுவவும் தமிழ்நாட்டில் புத்த மதம் தொடர்பான சுற்றுலா நகரங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டிலுள்ள மிகப் பெரிய சிலையான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு அடுத்தப்படியாக மிகவும் உயரமான போதி தர்மர் சிலையை காஞ்சிபுரத்தில் நிறுவப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் காஞ்சிபுரம், மாமல்லபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 6 நகரங்களை, புத்த மதம் தொடர்பான சுற்றுலா நகரங்களாக உருவமைக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுலா துறை அமைச்சகத்திடம் நிதியை பெற அரசு தீர்மானித்துள்ள அதேசமயம் சீன தாய்மொழியான மாண்டரின் மொழியில் மாமல்லபுரத்திலுள்ள 10 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சியளிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரத்தில் பல்லவ இளவரசர்களில் ஒருவரான போதி தர்மர், புத்த மதத்தின் சிறப்புகளை பரப்ப சீனா சென்றதாகவும் அப்போது அவர் அங்கு உள்ள சிலருக்கு தற்காப்பு கலையை பயிற்றுவித்தாக வரலாறுகள் தெரிவிக்கிறது.

அத்துடன் தமிழ்நாட்டிற்கும் புத்த மதத்திற்குமான தொடர்பு 2000ஆண்டுகள் பழமையானது என்றும் வரலாற்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor