விற்றமின் குறைபாடு தசைகளை பலவீனமாக்கும்- ஆய்வறிக்கை

வைட்டமின் D குறைபாடு எலும்பு தசைகளை வலுவிழக்கச் செய்யும் என்றும், இந்த பாதிப்பு பதின்பருவம் முதல் முதுமை வரை தொடரும் எனவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறு வயது முதலே இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டல் முதுமையில் எலும்பு தசைகள் பலவீனமடைந்து மூட்டு வலிகள் அதிகரிக்கச் செய்யும்.

தசைகளை வலுவாக்க உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும் அதை பாதுகாக்க உதவும் வைட்டமின் D உடலுக்குக் கிடைத்தால்தான் அதில் பலன் உண்டு. இல்லையெனில் அதில் எந்தவித பலனும் இல்லை என அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே உடற்பயிற்சியோடு வைட்டமின் D சத்தையும் எடுத்துக்கொள்வது அவசியம் என்கிறது.

international journal Clinical Interventions வெளியிட்ட இந்த ஆய்வில் 4000 பேர் பங்கேற்றுள்ளனர். சிறு வயது முதலே வைட்டமின் D சத்தில் கவனம் செலுத்தாவிட்டால் 60 வயதை எட்டும்போது தசைகளின் பலவீனம் மூன்று மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor